www.kalvimalar.com
சென்னை: மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 3ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசைப்ப ட்டியல் ஜூலை 1ம் தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கவுன்சலிங் ஜூலை 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்கக தேர்வுக் குழு அலுவலகத்தில் நடைபெறும் அரசு மருத்துவக் க ல்லூரிகளில் ஆயிரத்து 398 எம்.பி.பி.எஸ்., இடங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 251 இடங்களும் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 85 இடங்களும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 850 இடங்களும் இந்த கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு புதிய அரசு மருத்துவக் கல்லூரி மூலமாக 85 இடங்களும், புதிய தனியார் மருத்துவக் கல்லூரி மூலமாக 97 இடங்களும் கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் மருத்துவக் கல்வி இயக்குநர் மோகனசுந்தரம் கூறியதாவது அரசு சார்பில் தர்மபுரி, விழுப்புரம் மற்றும் திருவாரூரில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் துவங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது பெரம்பலூர், சிவகங்கை ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் இதன் மூலம் கிடைக்கும் 100 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 இடங்கள் போக மீதமுள்ள 85 இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படும். ஆதிபாரசக்தி மருத்துவக் கல்லூரி, சிதா மருத்துவக் கல்லூரி, எம்.ஜி.ஆர்., மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த ஆண்டு எம்.சி.ஐ., அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மட்டும் தங்களுக்குக் கிடைக்கும் 150 இடங்களில் 97 இடங்களை தமிழக அரசின் ஒதுக்கீட்டுக்கு வழங்கும். கன்னியாகுமரி, தேனி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அந்தந்த ஆண்டு அடிப்படையில் எம்.சி.ஐ., அங்கீகாரம் பெறப்பட்டு வருகிறது. பெருந்துனற ஐ.ஆர்.டி., மருத்துவக் கல்லூரியில் சென்ற ஆண்டு 66 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது இந்த ஆண்டு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார் மோகனசுந்தரம்.
Saturday, May 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment