Saturday, May 24, 2008

ஜூன் 3 முதல் எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்

www.kalvimalar.com
சென்னை: மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 3ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசைப்ப ட்டியல் ஜூலை 1ம் தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கவுன்சலிங் ஜூலை 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்கக தேர்வுக் குழு அலுவலகத்தில் நடைபெறும் அரசு மருத்துவக் க ல்லூரிகளில் ஆயிரத்து 398 எம்.பி.பி.எஸ்., இடங்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 251 இடங்களும் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 85 இடங்களும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 850 இடங்களும் இந்த கவுன்சலிங் மூலம் நிரப்பப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு புதிய அரசு மருத்துவக் கல்லூரி மூலமாக 85 இடங்களும், புதிய தனியார் மருத்துவக் கல்லூரி மூலமாக 97 இடங்களும் கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் மருத்துவக் கல்வி இயக்குநர் மோகனசுந்தரம் கூறியதாவது அரசு சார்பில் தர்மபுரி, விழுப்புரம் மற்றும் திருவாரூரில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் துவங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது பெரம்பலூர், சிவகங்கை ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் இதன் மூலம் கிடைக்கும் 100 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 இடங்கள் போக மீதமுள்ள 85 இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படும். ஆதிபாரசக்தி மருத்துவக் கல்லூரி, சிதா மருத்துவக் கல்லூரி, எம்.ஜி.ஆர்., மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த ஆண்டு எம்.சி.ஐ., அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மட்டும் தங்களுக்குக் கிடைக்கும் 150 இடங்களில் 97 இடங்களை தமிழக அரசின் ஒதுக்கீட்டுக்கு வழங்கும். கன்னியாகுமரி, தேனி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அந்தந்த ஆண்டு அடிப்படையில் எம்.சி.ஐ., அங்கீகாரம் பெறப்பட்டு வருகிறது. பெருந்துனற ஐ.ஆர்.டி., மருத்துவக் கல்லூரியில் சென்ற ஆண்டு 66 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது இந்த ஆண்டு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார் மோகனசுந்தரம்.

Friday, May 23, 2008

இன்ஜினியரிங் விண்ணப்ப தேதி மே 31 வரை நீட்டிப்பு

http://www.kalvimalar.com/
சென்னை: இன்ஜினியரிங் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்குவதற்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்குமான கடைசி தேதி மே 31 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இன்ஜினியரிங் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மே 26ம் தேதி என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கால அவகாசம் கோரி மாணவர்கள் தரப்பில் எழுந்த கோரிக்கையை அடுத்து இந்த தேதி நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு... http://www.kalvimalar.com/

அரசு மாணவர் விடுதிகளில் அட்மிஷன்!

http://www.kalvimalar.com/
சென்னையில் உள்ள அரசு மாணவர் விடுதிகளில் தங்குவதற்கு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து;வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு திருவான்மியூர், சைதாபேட்டை, ஓட்டேரி, மயிலாப்பூர், வடபழனி, லேடி வில்லிங்டன் பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு 7 விடுதிகளும், மாணவியர்க்கு ஒரு விடுதியும் உள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஓட்டேரி மற்றும் சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் இரண்டு விடுதிகள் உள்ளன. நான்காம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, இளநிலை, முதுநிலை, பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்களும் இந்த விடுதிகளில் தங்கி தங்களது படிப்பை தொடரலாம். தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டு பள்ளி சீருடைகளும் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஆலோசனை முகாம்களும் நடத்தப்படுகிறது. இந்த விடுதிகளில் சேர மாணவர்களின் குடும்ப வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலவாரியத்தில் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் பள்ளி மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை ஜூன் 30ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் ஜூலை 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு... http://www.kalvimalar.com/

Monday, May 19, 2008

படிப்பை தேர்வு செய்ய மாணவர்களின் வழிகாட்டி

கல்விமலர் www.kalvimalar.com தமிழ், ஆங்கிலம், பல்வேறு இந்திய மொழிகளில் கல்வித் தகவல்களை வழங்கும் நோக்கத்துடன் 2008 மே 9 ஆம் தேதி முதல் இயங்கத்தொடங்கிய இணையத்தளம் ஆகும்.
கல்லூரிகளை ஒப்பிட்டு சிறந்த கல்லூரியை தேர்வு செய்யவும், முக்கியத் தேர்வுகளை குறுஞ்செய்தி மூலம் நினைவூட்டவும் இத்தளத்தில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

என்ன படிக்கலாம்... எங்கே படிக்கலாம்...

கல்வித் துறையில் பல்வேறு வல்லுனர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளவும், ஐயங்களை தீர்த்துக் கொள்ளவும் www.kalvimalar.com இணையத்தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் துறைவாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. சிறப்புப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள், வேலை வாய்ப்புக்குத் தகுதிப்படுத்தும் படிப்புகள் பற்றியும் இத்தளத்தில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு நேரடியாக பயன் அளிக்கும் வகையில் இத்தளம் துவக்கப்பட்டிருந்தாலும் கூட, இளங்கலைப் படித்த பின்னர் படிக்கக்கூடிய, முதுகலை, சிறப்புப் படிப்புகள், தொழில் படிப்புகள், அரிய படிப்புகளின் தொகுப்புகள் உள்ளன.

கல்விக் கடன் பெற எளிய வழி

கல்விக்கடன் பெறுவதற்கான வழிமுறைகள், ஏராளமான துறைகளில் புலமைப்பரிசில் பெறுவதற்கான முறைகள், நுழைவுத் தேர்வுக்கு தயாராவதற்கு மாதிரித் தேர்வு, வினா தொகுப்புகள், வெற்றி பெறுவதற்கான வழிகாட்டல்கள், கல்வித் துறையில் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள், கட்டுரைகள், பெற்றோர்களுக்கான குறிப்புகள் முதலிய தகவல்கள் இத்தளத்தில் (www.kalvimalar.com) உள்ளன.